மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் தொடர்ந்தும் நாளொன்றுக்கு 12 வாகன விபத்துக்கள் பதிவு: பிரதி பொலிஸ் மா அதிபர்!

- Advertisement -

நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 12 வாகன விபத்துகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அத்துடன், இவ்வாறு இடம்பெறும் வாகன விபத்துகளினால் தினமும் 40 பேர் வரை  காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், வாகன விபத்துகளினால் நாளொன்றுக்கு 10 முதல் 12  உயிரிழப்புகள் பதிவு செய்யப்படுவதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காடியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், முன்னதாக இடம்பெற்ற வாகன விபத்துகளில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஐந்து பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, வாகன விபத்துக்களில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 12  பேர் உயிரிழந்துள்ளதாக  பிரதி பொலிஸ் மா தெரிவித்தார்.

இந்த நிலையில், வாகன விபத்துகள் இடம்பெறாத வகையில் சாரதிகள் மற்றும் பொது மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மதுபோதையில் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz