மெய்ப்பொருள் காண்பது அறிவு

அசாத் சாலியைக் கைது செய்ய நடவடிக்கை? -சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்!

- Advertisement -

நாட்டில், சரீஆ சட்டம் குறித்து கதைப்பதாயின் இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் முஸ்லிம் தனியார் சட்டம் குறித்து, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

நாட்டில், தேச வழமை மற்றும் கண்டியர் உள்ளிட்ட பல்வேறு தனியார் சட்டங்கள் பின்பற்றப்படுகின்ற நிலையில், தாம் முஸ்லிம் தனியார் சட்டத்தை பின்பற்றி வருவதாக, அவர் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த கருத்து தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டார்

“அவர் தெரிவித்த கருத்து, மத அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய கருத்தாகும். மத அடிப்படைவாதமே இறுதியில் தீவிரவாதம் வரை செல்கின்றது. ஷரீஆ சட்டத்தின் படி அவர் வாழ வேண்டும் எனில், சவூதி அரேபியாவுக்கே அவர் செல்ல வேண்டும். அவருக்கு இலங்கையில் இருக்க முடியாது. இலங்கையில் இருக்க வேண்டும் எனில், இலங்கை சட்டத்தின் படியே அவர் உள்ளிட்ட அனைவரும் செயற்பட வேண்டும். அனைவரும் இலங்கை சட்டத்தை மதிக்கும் போது, அவர் மாத்திரம் ஷரீஆ சட்டம் குறித்து கதைப்பது எனில், ஷரீஆ சட்டம் பின்பற்றப்படுகின்ற நாடொன்றுக்கே அவர் செல்ல வேண்டும். எமது நாட்டில் இருந்து  கொண்டு சரீஆ சட்டம் குறித்து கதைக்க முடியாது. எவ்வாறாயினும் அவரைக் கைது செய்து, அவரின் கருத்துத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.”

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz