மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடுகளினது தேசியக் கொடிகளுக்கு முழுமையாக மதிப்பளிக்க வேண்டும்: இலங்கைக்கான சீன தூதரகம்!

- Advertisement -

நாடுகளினது தேசியக் கொடிகளுக்கு முழுமையாக மதிப்பளித்து செயற்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அமேசன்  இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கால்துடைப்பான் விளம்பரத்தில் இலங்கையின் தேசியக் கொடி அச்சிடப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சினால் பெய்ஜிங் நகரில் உள்ள  இலங்கை தூதுரகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் குறித்த விளம்பரம் தொடர்பிலான  விசாரணைளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தமது நாட்டு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் பல  நாடுகளிலும்வேறு நாடுகளுடைய தேசியக்கொடிகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இலங்கையின் அமைதி சுபீட்சம் மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு பல தசாப்தங்களாக தமது நாடு மதிப்பளித்து வருவதாக  சீன தூதரகம் டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கையின் தேசியக் கொடி அச்சிடப்பட்டு அமேசன்  இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வர்த்தக விளம்பரம் தொடர்பில்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz