மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச வைத்தியசாலைகளில், பாரியளவு மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்!

- Advertisement -

அரச வைத்தியசாலைகளில், பாரியளவு மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

இன்று அரச வைத்தியசாலைகளில் பாரியளவு மருந்துகளின் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனால் பல்வகை நோய்களினால் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். வசதி உள்ளவர்களால் இதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமாக இருந்தாலும் தொடராக பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமது மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பாரிய தடைகளை எதிர் நோக்கும் அதே வேளை தமது நோய்களினால் இறக்கும் நிலைக்கும் ஆளாகிவருகின்றனர். அரச வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கத்திடம் நிதி இல்லை. இன்று பல நோயாளிகள் தன்னைச் சந்திக்கும் போது தாம் எதிர் நோக்கும் மருத்துவ தட்டுப்பாடுகள் குறித்து தெரிவித்த வன்னமுள்ளதாக சுட்டிக் காட்டிய அவர், நல்லாட்சி அரசாங்கத்தில் தான் சுகாதார அமைச்சராக இருந்த போது பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்ததாகவும் அத்தியவசிய,மக்களுக்கு மிகுந்த தேவையுடை பல மருந்துகளின், மாத்திரைகளின் பரிசேதனைகளை இலவசமாக வழங்கியதாக தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz