மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடப்போவது யார்?- காமினி விளக்கம்

- Advertisement -

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து, இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொதுஜன பெரமுன சார்பாக பெசில் ராஜபக்ஸ போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ள பின்னணியில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அமைச்சர் காமினி லொக்குகே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் பற்றி இப்போதே எதிர்வுகூறலை எவராலும் சொல்ல முடியாது. கடந்த காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவார் என்பதை எவராலும் கூறமுடியாதிருந்தது. காலம் வரும்போது தகுதியானவர்கள் அறிவிக்கப்படுவார்கள். பலம்வாய்ந்த கூட்டணி அமைக்கப்பட்டு பலம்வாய்ந்த அணியாகவே உள்ளோம். இப்போதே ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து பெரஹெராவைப் போன்று அழைத்துச்செல்ல முடியாது. 2015இல் எமக்கு கட்சியிருக்கவில்லை. ஓரிரு கட்சிகளே எமக்கு கூட்டணியில் இருந்தார்கள். இறுதியில் எமக்கு என்று கட்சியை உருவாக்கினோம். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற முன்பே நாங்கள் பலத்த வெற்றியை பெற்றோம். அதற்கான கௌரவம் பஸில் ராஜபக்ஷவுக்கே சாரும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என உறுதிபடச்கூறவில்லை. 2015இல் மைத்திரி போட்டியிடுவார் என எவராலும் ஊகிக்கமுடியாதிருந்தது. முன்னர் தின இரதில் அப்பம் சாப்பிட்டு அடுத்தநாள் நண்பகலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz