மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

- Advertisement -

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியர் ஒருவர் உட்பட  12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக    வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாளர்கள் உட்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் இதுவரை 21 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

தொற்றுக்குள்ளான 291 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.

பேலிய கொடை கொத்தனியுடன் தொடர்புடைய 236 பேர் உட்பட  சிறைச்சாலை கொத்தனியுடன் தொடர்புடைய 55 பேர் நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 397 குணமடைந்துள்ள நிலையில் நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைமந்துள்ளவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 958 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 803 பேர்    வைத்தியசாலைகளின் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 372 பேர்  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நேற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அக்கறைப்பற்று பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவர் உட்பட  மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவர் மேலும் ராகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவர் மற்றும் பொல்கஸ்விட்ட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz