மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனி இறக்குமதி விவகாரத்தில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய சுனில் ஹதுன்னெத்தி!

- Advertisement -

சீனி இறக்குமதி விவகாரத்தில், அரசாங்கம் பொதுமக்களிடமே நிதி மோசடி செய்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவிக்கின்றார்.

சீனி இறக்குமதியின் ஊடாக வருமான இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில், முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தியினால் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

- Advertisement -

இதன் ஊடாக மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, அவர் தனது மனுவின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த மனுவை தாக்கல் செய்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz