மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தலில் மாற்றம் ஏற்படுமா?- இராணுவத் தளபதி விளக்கம்

- Advertisement -

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடுதிருப்புபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அவ்வாறு நாடு திருப்புபவர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் நாடு திரும்புபவர்களை பீசிஆர் பரிசோதனைகளுக்கு பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சினால் கடந்த நாட்களில் யோசனை தெரிவிக்கபட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தடுப்பு செயலணி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் திங்கள் கிழமை தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போது வரையில், வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பும் அனைவரும் முப்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களம் மற்றும் விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz