மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை – வெளியான முக்கிய தகவல்..!

- Advertisement -

கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை மீள ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையே உயிர்க்குமிழி முறைமையிலான சுற்றுலாப்பயணத்திட்டத்திற்கு அமைவாக, குறித்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை ஆரம்பிக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை ஆகிய விமான நிலையங்களுக்கு இடையிலான உள்ளூர் விமான சேவைகளையும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மடு திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொள்வோருக்காக, இந்திய அரசாங்கத்தின் உதவியில் 144 தங்குமிட விடுதிகளை அமைக்கும் செயற்றிட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரண்டு நாட்டுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த அபிவிருத்தி திட்டமானது அமைந்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz