மெய்ப்பொருள் காண்பது அறிவு

நேற்றைய தினத்தில் அதிகளவிலான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம்!

- Advertisement -

கொரோனா தொற்று குறித்த நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் நேற்று 58 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதில் களணி பகுதியில் 20 பேர் அடையாளம் காணப்பட்டமையே அதிகபட்ச எண்ணிக்கையாக காணப்படுகிறது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில், நேற்று 42 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கிரியெல்லவில் 39 பேரும், இரத்தினபுரி, ஹல்பிட்ட மற்றும் பலாங்கொடை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், காலி மாவட்டத்தில் 32 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 29 பேரும், நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 127 பேரும், நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 86 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 82 ஆயிரத்து 752 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 511 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 79 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் 103 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10 ஆயிரத்து 213 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றைய நாளில் மாத்திரம் நாட்டில் 6 ஆயிரத்து 694 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz