மெய்ப்பொருள் காண்பது அறிவு

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு – அமைதியான முறையில் செயற்படுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தல்!

- Advertisement -

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், பரீட்சை நடவடிக்கைகளின் பின்னர் அமைதியான முறையில் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில், இன்று நிறைவடையவுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், பரீட்சை மத்திய நிலையத்திலோ அல்லது குறித்த வளாகத்திலோ அமைதியற்ற முறையில் செயற்படுவோரின் பரீட்சை முடிவுகள் செல்லுபடியற்றதாக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், 1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பரீட்சைகள் சட்டத்துக்கு அமைய, பரீட்சார்த்திகளினால் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டால், கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் என, பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பரீட்சை நிலையங்களில் இடம்பெறக்கூடிய இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் 7 மணியுடன் மூடப்படும்

சப்ரகமுவ மாகாணத்தில் மாலை 7 மணியுடன் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இதனை அறிவித்துள்ளார். இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் மருந்தகளுக்கு மாத்திரம் தொடர்ச்சியாக திறந்து வைப்பதற்கு...

Developed by: SEOGlitz