மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களினால் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

- Advertisement -

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பரிந்துரையை உள்ளடக்குமாறு கோரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், மனித உரிமை பேரவையில் குறித்த தீர்மானத்தை முன்வைத்துள்ள நாடுகள், பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரைக் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக தீர்மானத்தை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தீர்மானம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, தமிழர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது விடுவதன் காரணமாக ஏற்படக்கூடிய அபாயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பரிந்துரையை உள்ளடக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திய மோடியிடம், பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், கடிதம் மூலமாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz