மெய்ப்பொருள் காண்பது அறிவு

டுபாயில் நிர்க்கதிக்குள்ளாயுள்ள இலங்கையர்கள் நாமல் ராஜபக்‌ஷவை சந்தித்ததாக தகவல்!

- Advertisement -

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் டுபாய் நகரில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவை சந்தித்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவிடம், தாம் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, குறித்த இலங்கையர்களின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

- Advertisement -

இதற்கமைய, குறித்த இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் சானக தினுஷன் ஆகியோர் ஊடாக முன்னெடுத்துள்ளதாக, அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் கட்டார் – டோஹா நகரில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

குறித்த இலங்கையர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்  தொழில், வருமானம் மற்றும் தங்குமிட வசதிகளை இழந்து நிர்கதிக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தமது பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் டோஹா நகரில்  நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz