மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ் விவசாயிகளிடம் இருந்து உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யுமாறு பிரமர் பணிப்புரை!

- Advertisement -

யாழ் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யுமாறு, பிரமர் மஹிந்த ராஜபக்ஸ லங்கா சதோச நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்ஜன் ராமநாதனின் கோரிக்கைக்கு அமைய, இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, ஒரு கிலோ கிராம் உருளைக் கிழங்கை, 100 முதல் 110 ரூபா வரையான மானிய விலையில் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட உருளைக் கிழங்கு செய்கையாளர்களுக்கு  நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு, அங்கஜன் ராமநாதனினால் இது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், இது தொடர்பில் கண்காணிப்பு  நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, யாழ் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து,  உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யுமாறு, பிரமர் மஹிந்த ராஜபக்ஸ லங்கா சதோச நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz