மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி!

- Advertisement -

கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பஸ் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, பஸ் உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்படும் புதுப்பித்தல் கட்டணம், தாமதக் கட்டணம், விலைமனுக் கோரல் கட்டணம், நேர அட்டவணைக் கட்டணம் மற்றும்  உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணம்  போன்ற கட்டணங்களை கடந்த வருடம் இறுதிவரை விடுவிப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

- Advertisement -

கடந்த வருடம் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பஸ் சேவைகளை மீள்நிலைக்கு கொண்டுவருவதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்ற காரணத்தினால், குறித்த மானியங்களை  இம் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சரினால் யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே,  குறித்த யோசனைகளுக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், உள்நாட்டு உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு புதிய கம்பனியொன்றை நிறுவுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பத்திக், கைத்தறி மற்றும் ஆடை உற்பத்தி அமைச்சின் திட்டத்திற்கமைய, வெளிநாடுகளில் காட்சி அறைகளை அமைத்து தெரிவு செய்யப்பட்ட முகவர்கள் ஊடாக சர்வதேச ரீதியில் வலுவான சந்தை வலையமைப்பை ஏற்படுத்து இலங்கை உற்பத்திகளை விரிவாக்கம் செய்வதற்கான நிறுவனமொன்றை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டது.

இதற்கமைய, லங்கா சலுசல கம்பனியின் நூறு வீத பங்குகளுடன், நிறுவனமொன்றை ஸ்தாபிப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து, கைத்தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz