மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காகவே, மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக இராணுவ தளபதி தெரிவிப்பு!

- Advertisement -

சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து, இராணுவத்தினரைப் பாதுகாக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைளையும் முன்னெடுத்து வருவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் குறித்து, அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்

- Advertisement -

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே, இராணுவத் தளபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவுக்குக் கொண்டுவருவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும், அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகவே, அது தாமதமடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக, தாம் பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்களை மறந்து, பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகள் தமக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை  மக்கள் புரிந்து கொள்வார்கள் என தாம் நம்புவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz