மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல்கள் இதோ!

- Advertisement -

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிக்காட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படும்போது பின்பற்றப்படவேண்டிய காரணிகள் குறித்து சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

- Advertisement -

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனையை முன்னெடுத்தல் மற்றும் கொரோனா சடலங்களை அகற்றுதல் ஆகியன குறித்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சடலத்தை அடக்கம் செய்யும் இடம் வரை கொண்டு செல்வது குறித்தும், அதனை அடக்கம் செய்வது தொடர்பிலும், சுகாதார அமைச்சினால் மற்றுமொரு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை விடுவிக்க அனுமதி கிடைத்த 24 மணி நேரத்துக்குள் அதனை எரிக்க அல்லது புதைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சடலம் உறவினர்களிடம் வழங்கப்படக்கூடாது எனவும், சடலங்களை வைப்பதற்கான பெட்டி உறவினர்களால் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நபர் உயிரிழக்கும் வைத்தியசாலை அல்லது சிகிச்சை மத்திய நிலையத்தினால் வழங்கப்படும் வசதிகளுக்கு அமைய, இறுதிச் சடங்குகளில் இரண்டு மத குருமார் கலந்து கொள்ள முடியும் எனவும், அதிகபட்சமாக ஐந்து உறவினர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறுதிச் சடங்குகளின் போது மத நிகழ்வுகள் 10 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், குறித்த சுகாதார வழிகாட்டல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பொலிஸ் ஆகியோரின் பாதுகாப்புடன், அதனை எரிக்கும் அல்லது புதைக்கும் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் எரிக்கப்படும் பட்சத்தில், உறவினரின் வேண்டுகோளுக்கு அமைய, உயிரிழந்தவரின் சாம்பலை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒன்றரை மீற்றர் முதல் மூன்று மீற்றருக்கு இடைப்பட்ட ஆழத்தில் குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கு உறவினர்கள் விரும்பும் பட்சத்தில், உரிய வைத்தியசாலை அல்லது சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்கான உரிய எழுத்துமூல அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் மாத்திரமே, சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரணைதீவு வரை, தினமும் காலை 5.30க்கு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்படுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனையை முன்னெடுத்தல் மற்றும் கொரோனா சடலங்களை அகற்றுதல் ஆகியன குறித்த வழிகாட்டல் 

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல்கள் இதோ! 1 கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல்கள் இதோ! 2 கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல்கள் இதோ! 3 கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல்கள் இதோ! 4

 

சடலத்தை அடக்கம் செய்யும் இடம் வரை கொண்டு செல்வது மற்றும் அதனை அடக்கம் செய்வது தொடர்பிலான வழிகாட்டல்கள்: 

 

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல்கள் இதோ! 5 கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல்கள் இதோ! 6 கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல்கள் இதோ! 7

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz