கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 598 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 20 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் கொரோனா சிகிச்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 56 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 438 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 552 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது