மெய்ப்பொருள் காண்பது அறிவு

நேற்றைய தினத்தில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு!

- Advertisement -

கொரோனா தொற்று குறித்த நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் நேற்று 112 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதில் தலங்கம பகுதியில் 56 பேர் அடையாளம் காணப்பட்டமையே அதிகபட்ச எண்ணிக்கையாக காணப்படுகிறது.

மேலும், கம்பஹா மாவட்டத்தில், நேற்று 57 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கட்டுநாயக்கவில் 14 பேரும், சீதுவயில் 11 பேரும், களணியில் 8 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 50 பேரும், நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 131 பேரும், நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 83 ஆயிரத்து 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 78 ஆயிரத்து 946 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 471 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 824 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் 93 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 9 ஆயிரத்து 762 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றைய நாளில் மாத்திரம் நாட்டில் 10 ஆயிரத்து 421 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz