மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

- Advertisement -

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி நாடளாவிய ரீதியில் கடந்த 25 ஆம் திகதி  மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 ஆயிரத்து 357 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகர பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பிடியாணை உத்தரவை தவிர்த்து செயற்பட்ட ஆயிரத்து 430சந்தேக நபர்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய  சந்தேக நபர்கள் 562 பேர் மற்றும் வெடிபொருட்களை தம்வசம்  வைத்திருந்து 16 சந்தேக நபர்களும் , போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆயிரத்து 108 பேரும், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில்  607 பேரும், வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியவர்கள் 146 பேரும்,  இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில் வாகன ம்   செலுத்திய 126  பேர் மற்றும்   அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்த    6  ஆயிரத்து 047  பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்  நாடளாவிய தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz