மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்தியவங்கி முறிகல் மோசடி – பிரதான சூத்திரதாரியின்றி வழக்கை கொண்டுசெல்ல சட்டமா அதிபர் தயார் – அலிசப்ரி தெரிவிப்பு!

- Advertisement -

மத்தியவங்கி முறிகல் மோசடியின் பிரதான சூத்திரதாரியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மத்தியவங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இல்லாத நிலையில் வழக்கை கொண்டுசெல்வதற்கு சட்டமா அதிபர் தயாராக உள்ளதாக நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

மத்தியவங்கி முறிகல் மோசடி இடம்பெற்று இன்றைய தினத்துடன் 6 வருடங்கள் பூர்த்தியாகின்றது.

- Advertisement -

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில், அந்த ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதியன்று மத்தியவங்கி முறிகல் மோசடி இடம்பெற்றுள்ளது.

மத்தியவங்கியினால் ஒரு பில்லியன் மதிப்புள்ள முறிகல் கொடுக்கல் வாங்களுக்கு ஏலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை 10 தசம் 058 பில்லியன் பெறுமதியில் ஏலம் பெறப்பட்டுள்ளது.

இந்த முறிகல் கொடுக்கல் வாங்களில் ஈடுப்பட்ட நிறுவனமானது முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் எலோசியஸ்ஸின் பேப்ச்சுவல்ஸ் ட்ரெசரிஸ் நிறுவனத்துக்கே 50 வுித பங்கு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு 10 பில்லியன் பெறுமதியான அதிக தொகைக்கு ஏலத்தை பெற்றுக்கொடுத்தமையானது  மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் ஆலோசனைக்கு அமைவாகவே முன்னெடுக்கபட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்க்பட்ட ஆணைக்குழுவினால் இந்த விடயம் கண்டறிப்பட்டதுடன், வெளிப்படுத்தவும் பட்டது.

மேலும், இந்த முறிகல் விநியோகத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

அத்துடன், இந்த அரச நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் ஊடாக பேப்ச்சுவல்ஸ் ட்ரெசரிஸ் நிறுவனத்துக்கு 8 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், முறிகல் மோசடி தொடர்பான வழக்கை மூன்று உர்நீதிமன்ற நீதியரசர்களை கொண்ட நிரந்தர குழாம் ஊடாக தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கவும், குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

குறிப்பாக முறிகல் மோசடியில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள  மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், சிங்கப்பூர் பிரஜையாக காணப்படும் நிலையில், அவரை நாட்டுக்கு அழைத்துவர சிவப்பு அறிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஒப்படைப்பு சட்டத்திற்கு அமைவாக  அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர தற்போதுவரையிலும் முடியாது உள்ளது.

இந்த நிலையிலேயே, அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர கூடிய முயற்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் இல்லாத நிலையிலேனும் வழக்கை கொண்டுசெல்ல தீர்மானிக்கபட்டுள்ளதாக நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz