மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை முழுமையாக நிராகரிக்கிறது -வெளிவிவகார அமைச்சர் உறுதி

- Advertisement -

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை முழுமையாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர், முன்வைத்துள்ள அறிக்கை தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சுயமரியாதை மற்றும் இறையாண்மை கொண்ட நாட்டிற்கு, முக்கியமாக, ஆட்சி குறித்த பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம், ஐக்கிய நாடுகள் சாசனத்தின், ஒரு பிரிவான, தற்போதைய சாசனத்தில் உள்ள எந்த விடயமும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவொரு அரசினதும் உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்காது என்பதை மீறுவதாக அமைந்துள்ளதாக, அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை தொடர்பான பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை முழுமையாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகளின் அனைத்து அமைப்புகளுடனும், இலங்கை தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிச்சக்திகளின் மூலமான விடயங்களை தொடர்ந்து வலியுறுத்துவது, பல சவால்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கக்கூடிய ஆபத்தான முன்னுதாரணத்தையும் கட்டமைப்பதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரசியல் நோக்கங்களுக்காக, இலங்கை மீது அவதானம் செலுத்தப்பட்டமை குறித்து வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும் என, அழைப்பு விடுப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சபை உட்பட ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில், அரசியலமைப்பிற்கு இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக தயாராக இருப்பதாகவும், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz