கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 43 விமானங்கள் ஊடாக ஆயிரத்து 692 பேர் தமது பயண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணித்தியால காலப்பகுதிக்குள் குறித்த பயண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, வெளிநாடுகளில் இருந்து 867 பேர் 22 விமானங்களூடாக நாடுதிரும்பியுள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 103 பேரும், மாலைதீவிலிருந்து 84 பேரும், குவைத்திலிருந்து 75 பேரும், கட்டாரிலிருந்து 71 பேரும், சவுதி அரேபியாவிலிருந்து 64 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் இராணுவத்தினால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த காலப்பகுதிக்குள் பல்வேறு தேவைகள் நிமித்தம் 21 விமானங்களினூடாக 825 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதன்படி, தொழில் நிமித்தமாக, ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணித்த 292 பேரும் இவர்களில் உள்ளடங்குவதாக, விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.