மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை..!

- Advertisement -

தாம் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி மற்றும் வாகன இறக்குமதி ஆகியவற்றுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், இவ்வாறான சூழ்நிலைகளின் போது, செயற்படுவதற்கான மாற்று வழிமுறைகள் காணப்படுவதாகவும், அவற்றை மேற்கொள்ள தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும், சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 60 வீதமான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியன உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என, வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது தொடர்பிலான திகதியொன்று நிர்ணயிக்கப்படுமானால், அவற்றை கொள்வனவு செய்ய முன்கூட்டியே திட்டமிட முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

WI அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்ட இலங்கை அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2 ஆவது T20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 20...

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் கொடுத்த வாக்கை மீறிய அரசாங்கம்: துஷார இந்துனில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், கத்தோலிக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே,...

நாட்டிற்கு 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த வாள்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்...

கொழும்பின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 9 மணியிலிருந்து இவ்வாறு 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

Developed by: SEOGlitz