மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் மாத்திரம் நேற்றைய தினம் 100க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம்!

- Advertisement -

கொரோனா தொற்று குறித்த நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் அதிக அளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் நேற்று 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கொழும்பு கோட்டையில் 37 பேரும், நாரஹேன்பிட்டியில் 11 பேரும், நுகேகொடையில் 7 பேரும், ஹோமாகமையில் 5 பேரும், அதிக பட்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில், நேற்று 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

களணியில் 14 பேரும், தெல்கொடையில் 9 பேரும், திவுலபிட்டிய, கம்பஹா மற்றும் பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் தலா 8 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 53 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 48 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 32 பேரும், கண்டி மாவட்டத்தில் 29 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 பேரும், நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 18 பேரும், மொனறாகலை மாவட்டத்தில் 17 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 16 பேரும், கேகாலை மாவட்டத்தில் 15 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 81 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 75 ஆயிரத்து 842 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 453 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 714 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கமைய, 42 வைத்தியசாலைகளில் 2 ஆயிரத்து 118 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

மேலும், 27 இடைநிலை பராமரிப்பு மையங்களில் 2 ஆயிரத்து 762 பேரும், 3 கட்டணம் செலுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையங்களில் 213 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் 3 பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தின், பள்ளியாகொட்டுவ மற்றும் கல்ஹின்ன ஆகிய கிராம உத்தியோகத்தர்கள் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி 166 A கிராம உத்தியோகத்தர் பிரிவும் தொடர்ந்து முடக்க செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நெல் கொள்வனவின்போது ஆறு மாவட்டங்களுக்கு முன்னுரிமை

போட்டி விலையில் நெல் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 2 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, எதிர்வரும்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையினை ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை  முழுமையாக ஒப்படைப்பதற்கு  சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இணக்கம்...

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...

Developed by: SEOGlitz