மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் – இலங்கை நாடுகளுக்கிடையில் 5 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடல்..!

- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் ஐந்து முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நேற்று மாலை வருகை தந்தார்.

- Advertisement -

இதற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் ஐந்து முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.பாகிஸ்தான் - இலங்கை நாடுகளுக்கிடையில் 5 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடல்..! 1

சுற்றுலா ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாட்டு முதலீட்டு சபைகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கை தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கராச்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அத்துடன், கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் வர்த்தகக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதேவேளை, இரு தலைவர்களும் நேற்றைய தினம் கூட்டு ஊடக சந்திப்பொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

பாகிஸ்தான் - இலங்கை நாடுகளுக்கிடையில் 5 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடல்..! 2

இதன்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்துடன், ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை, இரு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் பகிர்வின் மூலம், கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் - இலங்கை நாடுகளுக்கிடையில் 5 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடல்..! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

WI அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்ட இலங்கை அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2 ஆவது T20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 20...

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் கொடுத்த வாக்கை மீறிய அரசாங்கம்: துஷார இந்துனில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், கத்தோலிக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே,...

நாட்டிற்கு 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த வாள்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்...

கொழும்பின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 9 மணியிலிருந்து இவ்வாறு 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

Developed by: SEOGlitz