மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி அங்கிருந்து வெளியேறவுள்ளதாக, அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.