மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்து!

- Advertisement -

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு உட்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள், சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி காரியாளத்தில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பென்றில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள்   சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படவுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் ஜனாதி பதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வறுமையில் இருந்து உயர்த்தும் நோக்கில் குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்க்பட்டது.

தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு, மருத்துவமனைகள் பாடசாலைகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களில் பணியாளர்களாக செயற்படுவதற்கான பயிற்ச்சிகள் வழங்கப்படுவதுடன், அதற்கான நியமனங்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், அவர்கள்  சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நெல் கொள்வனவின்போது ஆறு மாவட்டங்களுக்கு முன்னுரிமை

போட்டி விலையில் நெல் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 2 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, எதிர்வரும்...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையினை ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை  முழுமையாக ஒப்படைப்பதற்கு  சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இணக்கம்...

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக, இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்...

இலங்கையில் தடுப்பூசி வழங்குவதில் உள்ள பின்னணி – இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசி..!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC செய்தி சேவையினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி...

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால் நான்காவது நாளாகவும், கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள...

Developed by: SEOGlitz