மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரயிலில், உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகளை இடைநிறுத்த தீர்மானம்..!

- Advertisement -

ரயில் ஆசனப் பதிவுகளின்போது, உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர தபால் ரயில்களில், குறித்த உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

உறங்கல் இருக்கைகளுக்கான போர்வைகளை சுத்தம் செய்யும் பணிகள் இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இரவு நேர தபால் ரயில்களில், உறங்கல் இருக்கைகளுக்கான ஆசனப் பதிவுகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம்..!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாவதாக இரணைதீவு பகுதியில் இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் ஓட்டமாவடி மற்றும்...

க.பொ.த உயர்தர – சாதாரண தரீப்பட்சைகள் நடாத்தும் அட்டவணையில் மாற்றம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரீப்பட்சைகளை நடத்தும் அட்டவணையில், மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, அரசாங்கம் எந்தவொரு தரப்புடனும் இதுவரை கலந்துரையாடவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. அத்துடன், இவ்வாறான...

மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க உடன் இணைந்து பணியாற்ற தாம் தயார்: ஐ.ம.ச கருத்து!

மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் மாத்திரமே இணைந்து செயற்பட உள்ளதாக...

இரத்தினக்கல் அகழ்வு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, லக்கல பிரதேச செயலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்,  குறித்த நடவடிக்கையானது...

யாழில் குழந்தையை தாக்கிய தாயின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஒன்பது மாத குழந்தையொன்றை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய், சிறுவர் சீர்திருத்தப்பளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எமது...

Developed by: SEOGlitz