மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் நேற்றைய நாளில் அடையாளம்!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 477 பேரும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 15 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 905 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 732 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 4 ஆயிரத்து 714 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 559 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்

பிரித்தானியாவில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த புதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளுக்கு எதிராக செயற்படும் தன்மை காணப்படுவதாகவும் எச்சரிக்கை...

1000 ரூபா சம்பள விவகாரம் -ஆட்சேபனைகளை ஆராய கூடுகிறது சம்பள நிர்ணய சபை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என, சம்பள நிர்ணய சபையில்...

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் மனித உரிமை பேரவையில் இன்று

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பிலான முறைசாரா ஆலோசனையாக இந்த தீர்மானம்...

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள  நிலையில்  அது தொடர்பில்  ஆராய்வதற்கு...

க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பம்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில்  இன்று ஆரம்பமாகவுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 2020 ஆம்...

Developed by: SEOGlitz