மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு விசேட திட்டம் முன்னெடுப்பு: சுற்றுலாத்துறை அமைச்சு!

- Advertisement -

நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஐந்து ஆண்டுகால சிறப்பு ஊக்குவிப்பு திட்டமொன்றை முன்னெடுக்க சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளை இலக்கு வைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், இதற்கான மூலோபாய திட்டமொன்றை வகுக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், குறித்த மூலோபாய திட்டமானது, அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதற்காக உயர்மட்ட நிபுணர் குழுவொன்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தலாவாக்கலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்!

தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தலாவாக்கலை –...

யாழ் மாநகர சபை முதல்வரை சந்தித்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Bernard lelarge யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் யாழ்ப்பாண...

தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரல்..!

இலங்கை கிரிகெட் அணி வீரர் தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது கிரிகெட் தொடருக்கான...

5 இலட்சம் sinopharm கொரோனா தடுப்பூசியினை நன்கொடையாக பெற்றுக் கொண்ட ஈரான்!

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் sinopharm கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கமைய,   நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுமென ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,...

மைதானங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழில் முன்னெடுப்பு!

நாடளாவிய ரீதியில் 332 கிராம விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்படி, இதற்கான நிகழ்வு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன்...

Developed by: SEOGlitz