மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் விவகாரத்தில் பக்கச்சார்பாக செயற்படும் சபாநாயகர்: சஜித் குற்றச்சாட்டு!

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் பக்கசார்பாக சபாநாயகர் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிப்பது தொடர்பில் மூன்று வாரங்களுக்குள் பதிலளிப்பதாக கூறிய சபாநாயகர் இதுவரை பதிலளிக்கவில்லை.நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நாடாளுமன்றம் வருவதற்கு சபாநாயகரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் இரண்டு  மேன்முறையீடுகளை மேற்கொண்டுள்ளார்.,ஆகவே பிரேமலால் ஜயசேகரவும் ரஞ்சன் ராமநாயக்கவும் மேன்முறையீடுகளை மேற்கொண்டுள்ளனர்.,ஆகவே இருவரில் ஒருவரை நாடாளுமன்ற அமர்வுகளில் அனுமதிக்காதிருப்பது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலாகும்.

தம் மீதான வழக்கில் முன்னாள் நீதியமைச்சரின் தலையீடு உள்ளதாகவும் அது தொடர்பான குரல் பதிவுகளை தக்க நேரத்தில் வெளிப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இதன் போது குறிப்பிட்டார்.

என்னுடைய வழக்கில் அரசியல் தலையீடு உள்ளது,முன்னாள் நீதியமைச்சர் என்னுடைய வழக்கில் தலையீடு செய்தார்.இதனை நான் முதற்தடவையாக கூறுகின்றேன்,ரஞ்சன் ராமநாயக்கவை எனது வழக்கு தொடர்பில் என்னிடம் குரல் பதிவுகள் உள்ளன,அதனை தேவையான நேரத்தில் நான் வௌியிடுவேன்.நீதித்துறையின் உயர் அதிகாரிகள் முதல் அனைவருடைய குரல் பதிவுகளும் என்னிடம் உள்ளன. அரசியல் ரீதியாக எந்நவொரு பழிவாங்கலையும் எமது அரசாங்கம் மேற்கொள்ளவில்லை,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

க.பொ.த சாதரண தர பரீட்சை தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்த முக்கிய அறிவித்தல்..!

கல்விப்பொதுத்தராதர சாதராண தர பரீட்சை நடவடிக்கைகளின் போது அனைத்து    சிசுசெரிய பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. சுகாதார வழிகாட்டுதலகளுக்கமைய சாதாரணதர பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்குவது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்...

ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐ.நா சபை அழைப்பு..!

இந்து சமுத்திரத்தில் சிக்கியுள்ள ரோஹிங்யா அகதிகளை மீட்பதற்கு முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில்...

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை...

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட வான்தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்: ஜோபைடன்!

கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க வான் தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி சிரியாவிலுள்ள ஈரான்...

Developed by: SEOGlitz