உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரனை அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க்பட்டுள்ளது. அதனை நாடாளுமனறத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம் என்பதை அரசாங்கம் என்ற ரீதியில் அறிவித்துக்கொள்கின்றோம். அடுத்தது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேசுவதற்கு ஹரின் பெர்ணான்டோவுக்கு உரிமை இல்லை. 300 பேர்வரையில் உயிரிழக்கும் வரை பார்ததுக்கொண்டு இருந்தவர். சாதாரணதரத்தில் சித்தியடையாது இருப்பது ஹரின் பெரணானடோதான்.