உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது இருப்பதற்கான காரணத்தை தெளிவுப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென நாம் எதிபார்த்தோம். ஆனால் தற்போதைய நிலையில் 6 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவை கத்தோழிக்க சபையானது நிராகரித்துள்ளது. அதழல் உள்ள உறுப்பினரகளுக்கு சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களே இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை ஏன் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படாது உள்ளது. அதனை சமர்ப்பது குறித்த நிலைப்பாட்டை அரசாங்கத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.