மெய்ப்பொருள் காண்பது அறிவு

க.பொ.த சாதரண தரப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

2020 ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விரிவுரைகள் மற்றும் பகுதி நேர வகுப்புகள் ஆகியவற்றை நடாத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவிலிருந்து குறித்த தடை நடைமுறைப்படுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, பொதுப் பரீட்சைகள் சட்ட விதிமுறைகளின்படி குறித்த தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சை தொடர்பிலான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகிக்கவும் குறித்த காலப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சை வினாப்பத்திரங்களுக்கு விடையளிக்குமாறு அல்லது அதனை ஒட்டிய வகையில், போஸ்டர், பேனர் மற்றும் கையேடுகள் ஆகியவற்றை இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகம் மூலமாக பிரசுரிக்கவும் பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.

அத்துடன், இந்த நடைமுறைகளை மீறி செயற்படும் நபர்கள் பொதுப்பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில், அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை: துஷார இந்துனில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில், கத்தோலிக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே,...

நாட்டிற்கு 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை குறித்து ஆராய்ந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறித்த வாள்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்...

கொழும்பின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 9 மணியிலிருந்து இவ்வாறு 20 மணித்தியால நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டன

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளன சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சடலங்களை அடக்கம்...

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை அண்மித்துள்ளது

நாட்டில் 338 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 948...

Developed by: SEOGlitz