முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படும் விவகாரத்தை, பாகிஸ்தான் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், கொழும்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என நிபுணர்குழுவினால் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அதனை நிறைவேற்ற வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் சிறுபான்மை சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியுமென வைத்திய துறையினர் தெரிவித்துள்ள போதிலும், அது குறித்து அரசாங்கம் அமைதிகாத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.