பாதுகாப்பு காரணங்களுக்காகவே பாகிஸ்தான் பிரதமருடனான முஸ்லிம் கட்சித் தலைவர்களின் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இம்ரான் கானுடனான சந்திப்புக்கு கோரியிருந்த நிலையிலேயே அது இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சந்திப்புக்கள் அரசாங்கத்தினால் இரத்து செய்யப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இரு நாடுகளினதும் அரசியல் ஆலோசனை குழுக்களினாலயே பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் தொடர்பான தீர்மானங்கள் எட்டப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அரசாங்கம் இதனுடன் தொடர்புபடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டமையின் பின்னால் அரசியல் நோக்கங்கள் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.