மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமிந்தாஸ் பதவி விலகிமை குறித்து தாம் கவலையடைவதாக நாமல் தெரிவிப்பு!

- Advertisement -

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சமிந்தாஸ் பதவி விலகிமை குறித்து தாம் கவலையடைவதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டார்.

- Advertisement -

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை  வழங்கியுள்ள நிலையில், கிரிகெட் சபை அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. அவரின் கோரிக்கையில் உள்ள நியாயம் மற்றும் அசாதாரண நிலைமை குறித்து எமக்கு கூற முடியாது.சமிந்தவாசுக்கும், கிரிகெட் சபைக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் காணப்படுகின்றது.தமது தேசிய கிரிகெட் அணி வெளிநாட்டு சுற்றுலாவை மேற்கொள்வதற்கு நான்கு மணித்தியாலங்களுக்கு முன்னர், அவர் பதவி விலகியமை குறித்து, நான் தனிப்பட்ட ரீதியில் மிகவும் கவலையடைகின்றென்.கிரிகெட் சபையில் எந்தவித சிக்கல்கள் காணப்பட்டாலும், வீரர்கள்தான் இறுதியில் பாதிக்கப்படுகின்றார்கள்.குறிப்பாக இவ்வாறான ஒரு இளம் வீரர்கள் குழு, 2023 உலகக் கிண்ணத்தை நோக்காக கொண்டு தயாராகும் போது, அவர் இவ்வாறு பதவி விலகியமை குறித்து நான் கவலையடைகின்றேன்

இதேவேளை,அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே, சமிந்த வாஸ் போன்ற சிறந்த பயிற்றுவிப்பாளர்களை, இலங்கை கிரிகெட் அணி இழந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார உப்புல்தெனிய தெரிவிக்கின்றார்

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிருந்து தான் விலகுவதாக, சமிந்த வாஸ் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிகெட் தொடரின்,  ஆலோசகர் குழுவிலிருந்தும் தான் விலகுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்

இந்தப் பின்னணியிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார உப்புல்தெனிய இவ்வாறு குறிப்பிட்டார்

எமது நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் திறமையான வீரரான சமிந்தவாஸ், கிரிகெட் கட்டுப்பாட்டு சபையுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தார்.மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிகெட் தொடருக்காக அவர் தனது சம்பளத்திற்காக 3500 டொலரை மேலதிகமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் இலங்கை கிரிகெட் சபை இது தொடர்பில் பகிரங்க அறிக்கையொன்றை வெளியிட்டு அவரை அவமானப்படுத்தியது.சமிந்த வாஸ் என்பவர், எமது நாட்டின் பெயரை, வெளிநாடுகளுக்கு அறிமுகப்படுத்திய முக்கியமான வீரராகும். இந்த நிலையில், கிரிகெட் கட்டுப்பாட்டு சபையில் உள்ள பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கு 10 முதல் 15 லட்சம் வரை மாதாந்த சம்பள உயர்வு வழங்கப்படும் போது, சமிந்தவாஸ் போன்ற சிறந்த வீரர்களுக்கு 3500 டொலரை வழங்காது உள்ளமை குறித்து, நாம் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் வினவ விரும்புகின்றோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz