மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் பிரதமர் பயணிக்கும் விமானத்திற்கு அனுமதியளித்த இந்தியா!

- Advertisement -

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயணிக்கும் விமானத்தை, தமது நாட்டின் வான்பரப்பின் ஊடாக இலங்கைக்கு பயணிக்க இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

- Advertisement -

அத்துடன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதமர் இம்ரான் கானுடன் வருகை தரவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படும் விவகாரத்தை, பாகிஸ்தான் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில்,  கொழும்பில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது

இதன்படி, குறித்த போராட்டம், பலாத்கார தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால், இன்று பிற்பகல் 3.00 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக,முன்னெடுக்கப்படவுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என நிபுணர் குழுவினால் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அதனை நிறைவேற்ற வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.

அத்துடன்,  சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், இதன்போது வலியுறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக Saliya Pieris தெரிவு!

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி Saliya Pieris தெரிவு செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் 85 ஆவது தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்படி, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகளான, Kuvera de...

கிழக்கின் காடுகளை ஊடறுக்க போகும் விசேட இராணுவப்படை..!

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காடழிப்பு நடவடிக்கைககளை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட படையணியொன்றை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காடழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட...

பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடை 190 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 192 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

இந்தியாவின் ஆதரவை கோரும் கூட்டமைப்பு…!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்லிட்ஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா ஊடகங்களுக்கு இவ்வாறு...

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பரிந்துரைகள் அவசியம் – அங்கஜன் கோரிக்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இன்றைய மத்திய செயற்குழுக்கூட்டத்தில் உத்தேச புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டார், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

Developed by: SEOGlitz