நாடு திரும்ப முடியாத நிலையில் வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 207 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
தொழில் நிமித்தம் கட்டார் நாட்டிற்குச் சென்றிருந்த இலங்கையர்களே இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதன்படி, குறித்த இலங்கையர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 1510 எனும் விமானம் ஊடாக இன்று காலை 5.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் இராணுவத்தினால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பவைக்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.