Park and Ride போக்குவரத்து திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த போக்குவரத்து செயற்றிட்டம் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், Park and Ride போக்குவரத்து திட்டத்தை பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து எதிர்காலத்தில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த போக்குவரத்து செயற்றிட்டத்தில் மேலும் புதிய பேருந்துகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.