மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரிசி ஆலை உரிமையாளர்களின் ஊழல் மோசடிகளுக்கு தாம் இடமளிக்கப் போவதில்லை: மஹிந்தானந்த!

- Advertisement -

அரிசி ஆலை உரிமையாளர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகளுக்கு, தாம் இடமளிக்கப் போவதில்லை என விவாசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

நாம் நெல்லிற்கு உத்தரவாத விலையொன்றை நிர்ணயித்ததன் பின்னர், அரிசி ஆலை உரிமையாளர்கள், கிட்டத்தட்ட மூன்று ரூபா வரை கூடுதலாக கொடுத்து, விவசாயிகளிடம் நூற்றுக்கு 80 வீத நெல்லை மொத்தமாக கொள்வனவு செய்வார்கள். இறுதி 10 அல்லது ஐந்து வீதத்தை 70 ரூபா கொடுத்து கொள்வனவு செய்வார்கள். இதனையடுத்து தாம் முழுத் தொகைகையையும் 70 ரூபாவுக்கே கொள்வனவு செய்ததாகவும், 125 ரூபாவுக்கு அரிசியினை விற்பனை செய்யுமாறும் அவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுகின்றார்கள். இதன் ஊடாக பில்லியன் கணக்கில் ஊழல் இடம்பெறுகின்றது.நாம் அரசாங்கம் என்ற வகையில், உரம், தொழிநுட்பம் என அனைத்தையும் வழங்குகின்றது. விவசாயிகள் மாதக்கணக்கில் தமது உயிரை பணையம் வைத்து உழைக்கின்றார்கள். ஆனால் நான்கு பேர் இருந்து கொண்டு கொள்ளை அடிக்கின்றார்கள். அவ்வாறு செய்ய நாம் இடமளிப்பதில்லை.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவு நாளை..!

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் ‘பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர்சொற்பொழிவின்’ மூன்றாம் நிகழ்வு நாளை (28-02-2021) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் பிரதான உரையை...

மீண்டும் அணிக்கு வரும் கெய்ல் – இலங்கை தொடர் விபரம் உள்ளே..!

இருபதுக்கு 20 போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரிஸ் கெய்ல் மற்றும் Fidel Edwards ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் குறித்த இருவரும் இணைக்க்பட்டுள்ளனர். மேற்கிந்திய...

நேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில்  21 மாவட்டங்களில் இருந்து 497 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 151...

ஐ.ம.ச வின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம்...

COVAX தடுப்பூசி திட்டம் – சுகாதார அமைச்சு விடுத்து முக்கிய அறிவிப்பு..!

COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் இலவச கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் கட்டமாக 2 இலட்சத்து 64...

Developed by: SEOGlitz