மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக சஜித் குற்றச்சாட்டு!

- Advertisement -

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை, இன்று சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

- Advertisement -

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து, மற்றுமொரு பாதுகாப்பான சிறைச்சாலைக்கு மாற்ற, அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைப்பதன் ஊடாக அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், எனக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவரை அங்குணுகொலபெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைத்திருப்பது அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என நான் நினைக்கின்றேன். ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கு ஏதேனும் சிக்கல்கள் அல்லது துன்புறுத்தல்கள் ஏற்பட்டால், அதன் முழுப் பொறுப்பையும் தற்போதைய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் ரஞ்சன் ராமநாயக்கவை அங்குணுகொல பெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து, கொழும்பு பகுதியில் உள்ள பாதுகாப்பான ஒரு சிறைச்சாலைக்கு மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு – டேம் வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கொழும்பு – டேம் வீதியில் பயணப் பை ஒன்றில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் என பொலிஸார்...

எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது: காதர் மஸ்தான்!

ஐ. நா மனித உரிமை பேரவையில் ஆதரவு பெறுவதற்காக தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய வளங்களை ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்வதாக   எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளகூடிய விடயமல்ல அல்ல என...

கொடுத்த வாக்கை மீறி செயற்படும் அரசாங்கம்: இம்ரான் மஹ்ரூப் கருத்து!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் தேசிய சொத்துக்கள் ஏனைய தரப்பினருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கம் இன்று அதனை மீறி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. திருகோணமலை பிரதேசத்தில்...

ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்காது: கெஹெலிய!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நிராகரிக்க  இலங்கை எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு எதிரான குறித்த அறிக்கையை இந்தியா...

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்து குற்றச்சாட்டு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றால், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க...

Developed by: SEOGlitz