மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வு ஆரம்பம் : இலங்கை மீதான பிரேரணை நாளை சமர்ப்பிப்பு!

- Advertisement -

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வு சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் ஆரம்பமாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த முறை காணொளி ஊடாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை ஆகியவற்றை ஊக்குவித்தல் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை இந்த அமர்வின் 20 ஆவது விடயமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று ஆரம்பமாகியுள்ள ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது, இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானம் பல்வேறு நாடுகள் இணைந்த கூட்டுக் குழுவினால் முன்வைக்கப்படவுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா, Montenegro, மலாவி மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக இந்த தீர்மானத்தை முன்வைக்கவுளள்ன.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கட்டாய தகனம் செய்வதை இடைநிறுத்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக் கூறல், ஜனநாயக ஆட்சியை வலியுறுத்துதல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் 13 ஆவது திருத்தத்தை உறுதி செய்தல் ஆகிய விடயங்கள் இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, காணொளி தொழிநுட்பம் ஊடாக நாளைய தினம் உரையாற்றவுள்ளார்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்றும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளது.

சர்வதேச உறவுகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பிலான கலந்துரையாடல், இலங்கை நேரப்படி நாளை இரவு 7.30க்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட வான்தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்: ஜோபைடன்!

கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்க வான் தாக்குதல் தொடர்பில் ஈரான் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி சிரியாவிலுள்ள ஈரான்...

7 விக்கெட்டுகளினால் வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்ட Multan Sultans அணி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 7 ஆவது போட்டியில், Multan Sultans அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. Lahore Qalandars மற்றும் Multan Sultans அணிகளுக்கு இடையிலான 7 ஆவது போட்டி நேற்று ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இறுதி அறிக்கையை ஆராயும் குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்கும்: பிரசன்ன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குவின் இறுதி அறிக்கையை ஆராயும் விசேட குழுவின் பரிந்துரைகள் விரைவாக கிடைக்குமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

மத்தியவங்கி முறிகல் மோசடி – பிரதான சூத்திரதாரியின்றி வழக்கை கொண்டுசெல்ல சட்டமா அதிபர் தயார் – அலிசப்ரி தெரிவிப்பு!

மத்தியவங்கி முறிகல் மோசடியின் பிரதான சூத்திரதாரியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மத்தியவங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இல்லாத நிலையில் வழக்கை கொண்டுசெல்வதற்கு சட்டமா அதிபர் தயாராக உள்ளதாக நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். மத்தியவங்கி முறிகல் மோசடி...

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 497 பேர் நேற்று அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 497 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர்  இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில்...

Developed by: SEOGlitz