மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படவுள்ள தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதம் கிடைக்கப்பெறும்..?

- Advertisement -

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படவுள்ள கொரோனா தடுப்பூசி  எதிர்வரும் மார்ச் மாதம் முதல்வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் என  எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன்படி கொவேக்ஸ் திட்டத்தினூடாக வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி   தொகுதியின் முதற்கட்டமாக 3 லட்சம் தடுப்பூசிகள் இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனிடையே மேலும் 5 லட்சம் தடுப்பூசிகள் எதிர்வரும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் என உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி வைத்தியர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொவேக்ஸ் திட்டத்தின் ஊடாக எதிர்வரும் மூன்று மாதங்களில்   நாட்டிற்கு 1.6 பில்லியன் தடுப்பூசிகள்  கிடைக்கப்பெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz