மெய்ப்பொருள் காண்பது அறிவு

க.பொ.த சாதரண தரப்பரீட்சையின் முடிவுகள் திகதி அறிவிப்பு: கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

- Advertisement -

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் G.L பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், குறித்த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான  கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் ஜுலை மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் இரண்டினை அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 305 மாணவர்கள் கல்விப் பொதுதராதர சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள  பரீட்சார்திகளின் அனுமதி அட்டையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் G.L பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பரீட்சார்திகளின் அனுமதி அட்டையில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின்  திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக அவற்றை மேற்கொள்ள முடியுமென கல்வி அமைச்சர் G.L பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் பாரதி நினைவு நூற்றாண்டு சொற்பொழிவு நாளை..!

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் ‘பாரதி நினைவு நூற்றாண்டு இணையவழி தொடர்சொற்பொழிவின்’ மூன்றாம் நிகழ்வு நாளை (28-02-2021) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ய. மணிகண்டன் பிரதான உரையை...

மீண்டும் அணிக்கு வரும் கெய்ல் – இலங்கை தொடர் விபரம் உள்ளே..!

இருபதுக்கு 20 போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரிஸ் கெய்ல் மற்றும் Fidel Edwards ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் குறித்த இருவரும் இணைக்க்பட்டுள்ளனர். மேற்கிந்திய...

நேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில்  21 மாவட்டங்களில் இருந்து 497 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 151...

ஐ.ம.ச வின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம்...

COVAX தடுப்பூசி திட்டம் – சுகாதார அமைச்சு விடுத்து முக்கிய அறிவிப்பு..!

COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் இலவச கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் கட்டமாக 2 இலட்சத்து 64...

Developed by: SEOGlitz