நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
உலக சாரணர் அமைப்பின் நிறுவுனரின் 164 ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை சாரணர் சங்கத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.