மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை!

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை முதல் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கமைய  குறித்த நாட்களில் முற்பகல் 8.30 தொடக்கம் நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் astrazeneca covishield  கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உட்பட  நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேருக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக  கடந்த 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நாரஹேன்பிட்டி ராணுவ வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விசேட மத்திய நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இரணைதீவில் சடலங்கள் புதைக்கும் விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு?

கொவிட் 19 சடலங்களை கிளிநொச்சி இரணைதீவில் புதைக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இரணை தீவு பங்குத்தத்தை அருட்தந்தை மடுத்தீன் அடிகளார் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின்...

கொரோனா சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்!

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி –இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய  ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த...

கொரோனா தொற்றின் தற்போதைய முழு விபரம் உள்ளே..!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 598 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80...

உயிர்த்த ஞாயிறு இறுதி அறிக்கையை ஆராய பேராயர் மெல்கமினால் குழு நியமிக்கவுள்ளதாக தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை ஆய்வு செய்வதற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தின் அதிகாரி ஒருவரை...

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாக, வெளியுறவு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு துணை நிற்பதுடன்,...

Developed by: SEOGlitz