கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டார் என கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திக்க தீர்மானித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு விசாரணை அறிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு தொடர்பில் கர்தினால் அண்மையில் அதிருப்தி வௌியிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் இந்த அமைச்சரவைக் குழு இன்று பிற்பகல் தமது முதலாவது சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.