மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருமண நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சுதர்ஷினி விடுத்த அறிவிப்பு!

- Advertisement -

திருமண நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தமை காரணமாக திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையினை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.

- Advertisement -

அத்துடன், திருமண நிகழ்வுகளில் பங்கேற்பதன்  ஊடாக அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும்,  திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையினை 150 இல் இருந்து 50 ஆக குறைப்பது குறித்தும் முன்மொழியப்பட்டது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினால் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விருந்தினர்களின் எண்ணிக்கையினை குறைப்பது சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைக்கு வழிவகுக்குமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே  தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருமண நிகழ்வுடன் தொடர்புடைய துறையில் பணிபுரிபவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே மேலும்  தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம்..!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மேலும் 6 இடங்களை ஒதுக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாவதாக இரணைதீவு பகுதியில் இதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் ஓட்டமாவடி மற்றும்...

க.பொ.த உயர்தர – சாதாரண தரீப்பட்சைகள் நடாத்தும் அட்டவணையில் மாற்றம் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரீப்பட்சைகளை நடத்தும் அட்டவணையில், மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, அரசாங்கம் எந்தவொரு தரப்புடனும் இதுவரை கலந்துரையாடவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. அத்துடன், இவ்வாறான...

மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க உடன் இணைந்து பணியாற்ற தாம் தயார்: ஐ.ம.ச கருத்து!

மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் மாத்திரமே இணைந்து செயற்பட உள்ளதாக...

இரத்தினக்கல் அகழ்வு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தினை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, லக்கல பிரதேச செயலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்,  குறித்த நடவடிக்கையானது...

யாழில் குழந்தையை தாக்கிய தாயின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஒன்பது மாத குழந்தையொன்றை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய், சிறுவர் சீர்திருத்தப்பளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எமது...

Developed by: SEOGlitz